அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

உயிரினில் கலந்த உறவுகள்



ஈழவர் மனங்களில் உறையும் தெய்வங்கள்
நீங்கா இடம் பிடித்த நிய மானிடர்கள்.
மலைபோல் குவியிது மாலை அதை
வாங்கிட நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு நீங்கவில்லை
நீங்கப்போவதும் இல்லை.

எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும் உங்கள் செயல்
உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்.
விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்
தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்.
தமிழீழ தாகத்தினை தீர்திட சென்றீர்
தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்.

மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் நீங்கள்
வீழ்ந்தாலும் மறையாது வாழ்பவர் நீங்கள்
பூமி சுற்றும் வரை அழியாது உங்கள் பெயர்
மறையாது உங்கள் செயல்.

தோட்டாக்கள் துளைத்து உம் உயிர்மட்டும் பிரியலாம்
பெரும் கணைகொண்டு தகர்த்தாலும் உம் வீரம்
அழியாது தியாகம் மறையாது.

ஈழவர் நாம் உம்மை புதைக்கவும் இல்லை
மண்ணில் எரிக்கவும் இல்லை
எம் மனதில் விதைத்து விட்டு காத்திருக்கின்றோம்
நீர் முழைக்க பெரு விருட்சமாய் தளைக்க

கனல் மீது நீங்கள் நடந்ததை பார்த்துதான்
எம் உடலில் உரமேற உயிரில் வீரம் கலந்தது.
நீங்கள் விட்ட இறுதி மூச்சுள்ள காற்று பட்ட
எங்கள் தேகம் சிலிர்க்க
நீங்கள் வீழ்ந்த திசைநோக்கி நடக்கின்றோம்
உங்கள் வேட்கையை அடைக்க .

தமிழன் மறக்கமுடியா திருநாள்...!


பங்குனி 26 உலகத்தமிழன் மறக்காத நாள்
மறந்திட முடியாத் திருநாள்...!
புதிய படையொன்று தனியனாய்.
வான் தொட்ட முதல் நாள்....!
இராவண அரசன் பின்னர் முகில் தொட்ட
முதல் தமிழ் தனிப்படை....!
இயலாமை என்றெங்கள் எமது செயல்
வல்லமையில் இல்லை எனக்காட்டி விட்டார்..!

தனித்தமிழராய் வான் தொட்டு
சாதனை நிகழ்த்தி நின்றார்..!
ஈழத்தின் தலைவரின் மனதில் உதித்த
சரித்திர நாயகன் சஙகரால் உருப்பெற்று
உலகம் பேசிய வான் படை எம் படை.!.
பிறரிடம் கையேந்தி கால் தொட்டு வால்பிடித்து
பெற்றிடாத தனித்தமிழர் வான்படை..

தரை தொட்டோம் தவித்தாய்..!
கடல் தொட்டோம் கவிழ்ந்தாய் ...!.
வான் தொட்டோம் வாய் பிளந்தாய்.!

கன்னிப் பறப்பது கண்டது கட்டுநாயக்கா
கடைசிப்பறப்பது கண்டது களனிதிஸ்ஸ..
கலங்கி அதிர்ந்தாய் கண்காணிப் பெல்லாம்
கட்டிலின் கீழ் பதுங்கி விழி பிதுங்கி
விழித்தாய் விடிய விடிய...!
வந்த வழி தொரியாது போன வழித்தடமும் கிடையாது
உன்வாயில் வீரம் மட்டும் குறையாது வண்டு கொண்டு
தேடினாலும் தமிழன் வான்படை தொரியாது..
தொட்டது நீ ஓடு பாதையைதான்.. .!
நீ எம்மைதேடினாலும் நாடு நாடாய்
ஓடினாலும் அடங்கார் புலிகள் .!
நீ வாடி வதங்கி ஓயும் வரை ஓயார் தமிழர்..!

தரைப்படை கடல்படை குதிரைப்படை
யானைப்படை காண்பித்ததான் பண்டை தமிழர்
தனி வான்படையை காண்பித்தார் நம் தலைவர் ..!
கடலாலும் வரும் நிலத்ததாலும் வரும் வானாலும் வரும்
தமிழருக்காய் நியாயம் கேட்கும் தமிழர் படை
இது நிச்சயம் நடக்கும்...
காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்..
அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து கொள்.

தோல்விகள் தொடரில்லை..

நண்பா எழுடா
இந்தப் பூமியே உனக்கே எழுடா
உனக்கென்றும் நாட்கள் உண்டு
அதுவரை தோல்வியே கிடையாது
யானையின் பலமே உனக்கு
அந்த சிறுத்தையின் குணம்தான் இருக்கு
நினைத்ததையெல்லாம் முடிப்பாய்
நம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நின்றால்
தோல்வியைக் கண்டதும் ஒழிந்தால்
வாழ்க்கை துன்பத்தில்த்தான் முடியும்
வீரத்துடனே தோல்வியை எதிர்த்தால்
சரித்திரம் உன் பெயர் எழுதும்

புத்தகப் பாடமும் வேண்டும்
அனுபவப் பாடமும் வேண்டும்
அனுபவம் பாடம் ஒன்றே
நம் வாழ்வில் ஒளியை ஏற்றும்
எறும்பை சிறையில் இட்டால்-அது
நிலத்தை துளைத்து வெளியேறும்
யானையை சிறையில் இட்டால்
தகர்ப்பதன் மூலம் வழிதேடும்

நுண்ணிய புத்தியைக் கொண்டு
நீ சிந்தித்து செயல்ப்படு தோழா
வாழ்வினில் தோல்விகள் வரினும்
உன் சிந்தனைக்கு ஏது தோல்வி
உன்னை சிறையில் இடினும்- உன்
சிந்தனைக்கு சிறையே இல்லை
தோல்விகள் நிலையென இருந்தால்
வெற்றிகள் என்றுமே இல்லை
தோல்வியே கதியென இருந்தால்
வெல்பவர் நாட்டில் இல்லை
வென்றவர் வாழ்க்கையை தேடு
அதில் தோல்விகள் இருப்பதை பாரு
கற்றதை வைத்து கொஞ்சம்
அனுபவப் பாடமும் சேரு
நீயும் பெரியவன்தான்டா
இந்தப் பூமியே வியக்கும் தோழா

மனிதனை மனிதன் வெல்ல
விதியோ மனிதரை வெல்லும்
பல நோய்கள் கூட அதைச் செய்யும்
போரினில் வென்றவர் பலரும்
மெஞ்ஞானம் பெற்றவர் சிலரும்
நோயினில் வீழ்ந்தது உண்டு
நம்பிக்கையுடன் தலைதூக்கு
இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து
வெற்றிகள் உனை வந்து சேரும்
தோல்விகள் தனியென் மறையும்
நீயும் இப் பூமியில் வாழவே
தோற்றவனாய் சாவதற்க்கு அல்ல..

உயிரினில் கலந்த உறவுகள்...



ஈழவர் மனங்களில் உறையும் தெய்வங்கள்
நீங்கா இடம் பிடித்த நிய மானிடர்கள்
மலைபோல் குவியுது மாலை அதை
வாங்கிட நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு நீங்கவில்லை
நீங்கப்போவதும் இல்லை

எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும் உங்கள் செயல்
உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்
விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்
தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்
தமிழீழ தாகத்தினை தீர்த்திட சென்றீர்
தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்

மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் நீங்கள்
வீழ்ந்தாலும் மறையாது வாழ்பவர் நீங்கள்
பூமி சுற்றும் வரை அழியாது உங்கள் பெயர்
மறையாது உங்கள் செயல்

தோட்டாக்கள் துளைத்து உம் உயிர்மட்டும் பிரியலாம்
பெரும் கணைகொண்டு தகர்த்தாலும் உம் வீரம்
அழியாது தியாகம் மறையாது

ஈழவர் நாம் உம்மை புதைக்கவும் இல்லை
மண்ணில் எரிக்கவும் இல்லை
எம் மனதில் விதைத்து விட்டு காத்திருக்கின்றோம்
நீர் முழைக்க பெரு விருட்சமாய் தளைக்க

கனல் மீது நீங்கள் நடந்ததை பார்த்துதான்
எம் உடலில் உரமேற உயிரில் வீரம் கலந்தது
நீங்கள் விட்ட இறுதி மூச்சுள்ள காற்று பட்ட
எங்கள் தேகம் சிலிர்க்க
நீங்கள் வீழ்ந்த திசைநோக்கி நடக்கின்றோம்
உங்கள் வேட்கையை அடைக்க

என் ஈழத் தோழனே


என் ஈழத்தோழனே
நீ கோசமாய் ஆணையிடு
இமையே படுத்து பாறையாகும்
துணிவுடன் நீ நடக்க துள்ளும் அலைகளும்
உன் காலில் தலை குனியும்
சதியால் இழந்த மண்ணை
சரித்திரம் தேடித்தராது
புதிய சரித்திரம் நீ படைக்க
புறப்படு என் ஈழத்தோழா
வரும் நாள் உனக்கு
திரு நாள் ஆகும் தோழா
அடை மொழி அனைத்தும் அகன்றிட
புது ஒளி நாளும் வந்திட
துன்பங்கள் தொலைவாக தொலைந்திட
நாளை பிறந்திடும் தமிழரின் தாயகம்
புறப்படு என் ஈழத்தோழா
புதிய சரித்திரம் நீ படைக்க
புறப்படு என் ஈழத்தோழா...


எழுந்திடு வீரமாய்




தமிழனே வாழ்க்கையின் விழ்ச்சி
நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி
நாம் பயந்திட அல்ல
சொத்தின் இழப்பு நாம்
செத்திட அல்ல
சொந்த
த்
தின் இழப்பு சோகமாய்
நாம் வாடிட அல்ல
ஊரவர் வெறுப்பு நாம்
ஒழிந்திட அல்ல
உரிமையின் மறுப்பு
நாம் உறங்கிட அல்ல

தமிழனே எழுந்திடு வீரமாய்
கடலிலும் வேகமாய்
இழந்தது உனை சேரும்
பிரிந்தது இன்று உனை நாடும்
மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும்
உலகம் என்றும் உன் நிழலை

எமை மறந்ததேன் தாயே

svr.pamini
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளியானவளே
அபிராமப் பட்டரின் கவியானவளே-உனை
மலர் கொண்டு வணங்கினோம் தாயே
எமை மறந்ததேன் தாயே

அலை மேல் அலையும் சருகானோம்
சோதனைகள் எமைச் சுற்றியே
வேதனைகள் நிந்தம் எமை தீண்டியே
வாழ்கிறோம் தாயுமான தாயே
பாதகங்கள் அழிந்திட வேண்டும்
நம் வாழ்வு ஒளிர்ந்திட வேண்டும்
இன்பங்கள் பெருகிட வேண்டும்
மூகாம்பிகை தாயே
உனையன்றி யார் துணை தாயே

கண்ணீரில் கரைகின்றதே நாட்கள்
காலங்கள் சோகமாய் மாறிடுது தாயே
ஆயிரம் விழி கொண்ட தேவி நீ
ஒரு விழியால் எமை பார்த்திடு தாயே
எம் சோகம் அறிவாயோ தாயே
ஆதரித்து அருள் தருவாயா?

எம் சாபங்கள் அகலுமோ?
பாதக இருள் வினை நீங்குமோ?
புண்ணிய தேசமாய் எம் தேசம் மாறுமோ?
உன் மலர்ப்பாதம் சரணடைந்தோம் தாயே
சரணா கதி அளித்திடு தாயே

ஈழம் மலர்ந்ததே தெரிகின்றதா?


சூழுகின்ற பகையை வென்றே
எங்கள் ஈழம் எங்கள் கையில் வந்ததே தெரிகின்றதா?

புலிக்கொடியேற்றி ஆளும் காலம் வந்ததே
கல்லறை வீரர்களின் கனவும் பலித்ததே
அடிமை வாழ்வும் ஒழிந்ததே
அன்னியன் ஆட்சி முடிந்ததே
உலக வரை படத்தில் நம் நாடு
உலகமே பார்க்கும் வீரத்திரு நாடு

வீரம் விளைந்த மண்ணிலே
வீரப்புதல்வர்களின் கீதம்-
வன்னி மண்ணெங்கும் எதிரொலிக்குதே
மங்கயையர் மனமெங்கும் மகிழ்வு பொங்குதே
தம் மானம் காத்திட ஈழம் மலர்ந்ததென்றே-
சொல்லிச்சொல்லி சொல்லுக்குள் அடங்கா-
இன்பங்கள் எங்கும் மழைச்சாரலாய் பொழியுதே

குருதி உறைந்த மண்ணிலே பூக்கள் வாசம் வீசுதே
விடியல் விடிந்ததென்று
புல்லினங்கள் கானம் இசைக்குதே
ஓலை வீட்டிலும் இன்பமே
மாடி வீட்டிலும் இன்பமே
எம் தேசம் மலர்ந்ததென்று சொல்லியே

தேசம் இது எங்கள் ஈழ தேசமே
தேசம் கடந்தாலும் எம் நெஞ்சில்
வாசம் வீசும் ஈழ தேசமே
புலம் பெயர் நாட்டிலே எம் உறவுகள் மனமெங்கும்
புது வித ஆனந்த அலை அடிக்குதே
உலக தமிழர் மனதிலே தமிழனுக்கு ஒர் நாடு கிடைத்தென்று
சொல்லியே வாழ்த்து பா இசைக்கின்றார்களே

குருதிக்குள் நீராடிய ஈழத்தாயின் கண்ணில்
ஆனந்த கண்ணிர் பெருகுதே
வீர மறவர்களின் தியாகம் சரிதிரம் சொல்லுமே
வறுமை நிலை ஒளிந்து
வாழும் வாழ்க்கை ஒளியாய் நாளை மாறிடுமே
அழகிய நாடு எதுவென்றால் ஈழ நாடு என்று
உலகமே சொல்லும் நாள் வந்திடுமே

நான் இதுவரை கண்டது கனவா?
நிஜமாகிடும் நாள் வந்திடுமா?
கண்களிலே கனவு சுமந்து - என்
ஈழத்தாயின் விடியலுக்காக காத்து இருக்கிறேன்

ம(கிந்தா)டையா....

ஏய் ஆய்போவான் ம(கிந்தா)டையா
இந்திங் தெரியுதுதானே தெமிழ கட்டியோட பலம்
நாங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான்- ஆனால்
உன் போன்று புலன் இல்லாதவர்கள் அல்ல
பிணம் திண்னி கழுகே- நீ
விளையாட தமிழர்கள் என்ன விளையாட்டு திடலா
நீ கம்பி எண்ணும் நாட்கள் தொலைவில் இல்லை
நீ தொலை தூரமாய் போனாலும்
உன் சாவுக்கு காரணமாய் இருப்பது எம் பரம்பரைதான்
நீ பார்த்த பொழுதே முப் படையுடன்
ஆண்ட பரம்பரை எம் பரம்பரை – மீண்டும்
எம் மண்ணை நாம் ஆளூம் போது – ஆடப்போவது
உன் பரம்பரை…


எம் வீரப் புதல்வர்களின் ஆயுதங்கள் மெளனித்து
நிராயுத பாணியாக நின்ற வேளை
கண்வாய்,கை,கால்கள் கட்டி எம்
வீரப்பெண்களின் கற்பை சூறையாடி
அவர்கள் ஆடைகளை களைந்து அலங்கோலப்படுத்தி
நெஞ்சுரம் காட்டி சென்ற எம் வீரப் புதல்வர்களின்
உயிர்களை பின் புறத்தால் குடித்த
புறம் போக்கு நிலத்தில் பிறந்த பிணம் தின்னி நாய்களே
நாம் என்ன மெளனிப்போம் என்று நினைத்தீர்களோ!


நீ என் இனத்துடன் உன் இனத்தை வைத்தா போரிட்டாய்??
ஆம்! என்று சொல்ல உனக்கு 30 வருடங்கள் எடுக்கும்
இல்லையென்று ஒரே சொல்லில் சொல்லி விட்டு
உன்னையும் உன் இனத்தையும் காக்க
உதவி தந்த வல்லரசுகளையும் பட்டியலிட்டு கூறிவிட்டு போ
போ போ போ என்று கூறுகின்றேன்
எங்கே என்று புரிகின்றதா??
சற்றுத்திரும்பிப் பார்
எம் இனம் உனக்கு பிரியாவிடை கொடுத்து
சிறைக்கூடம் அழைத்து செல்ல காத்திருக்கின்றது


அன்று உன் இனத்தால் எம் இன அப்பாவி மக்கள்
இன்னல் படும் வேளையில் தூதராலயம் செல்வார்கள்
ஆனால் இன்று! எம் இனத்தை கொன்று ரசித்த- நீ
உன் நாட்டு தூதராலயத்திலே நிற்க முடியாமல்
தப்பித்து ஓட்டம் பிடிக்கிறாய்…


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நீ உரையாற்றுவதற்கு
அது என்ன புறக்கோட்டை முன் புற வீதியா??
உனது சகாக்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யும்
இடம் என்று நினைத்தாயா…???
அங்கு போர் குற்றவாளிகள் இல்லை
உனது உரையை கேட்க
இத்திங் பல்கலைக்கழகம் மாத்தயா


ஆங்கிலேயர் மரணித்த கல்லறைகளை
பூஞ்சோலைகள் ஆக்கி பாது காக்கும் அரக்கன் நீ
எமது மண்ணில் எமக்காக வீழந்த வீர மறவர்கள்
துயில் கொள்ளும் துயில் அறைகளை
கலைத்து விட்ட காடையனே …!
உனக்கு ஆங்கிலேயர் மண்ணிலேயே ஆட்சி கவிழுமோ???

“மமதம ஜனாதிபதியே மமதம ஜனாதிபதியே”
என்று நீ மார்பு தட்டி கூறும் சொல் முடிவுற்று
“மம தமா யுத்த அபராதகாரயா”(நான் தான் போர்க்குற்றவாளி)
என்று விரைவில் உரக்க சொல்லுவாய்

கல்லறை வீரர்களே கண் விழியுங்கள்..!






இப் பிரபஞ்சத்தில் ஆயிரம் ஆயிரம் அர்ப்பணிபுக்கள்
அத்தனையும் எம் ஈழ புதல்வர்களின் உன்னத அர்ப்பணிப்புக்கு ஈடாகுமா ?
சத்தியத்தோடு விடை பெற்றுச்சென்ற உன்னத அர்ப்பணிப்புக்களின்
உயிர்க்கொடைகள் வெறும் ஊமைகள் ஆக முடியுமா ?

விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்
தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்
தமிழீழ தாகத்தினை தீர்திட சென்றீர்
தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்

ஈழம் பிறப்பதற்காய் எவ்வளவைச்சுமந்தீர்கள்
எதற்கும் சாயாத சரித்திரப் புயல்கள் நீங்கள்
ஈழ மண்ணுக்கு மட்டும் புரியும் உங்கள் வீரம் பற்றி
தம்மை தம் மண்ணுக்கு விதையாக்கி சென்ற வேங்கைகள் இவர்கள் என்று

எதிரியை கதிகலங்க வைத்த பிஞ்சுகள் இவர்கள்
புலனுக்குத் தெரியாத புனிதர்கள் இவர்கள்
மரணத்தை மகிழ்வோடு அணைத்த சரித்திர புருசர்கள் இவர்கள்
ஈழத்தை காதலித்தவர்கள் அதனுள் தமிழரின் வீரத்தை கலந்தவர்கள்
கயவனைக் கனவிலும் கலங்கவைத்தஎம் காவற் தெய்வங்கள் இவர்கள்


நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன
சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம்
ஆனாலும் எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும் உங்கள் செயல்
உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்

"தம் உயிர் தந்து எம் உயிர் காத்த தயாளர்களே "
உமை வணங்க தடைகள் போட்டாலும்
வணங்கிய தமிழரை சுட்டு வீழ்த்தினாலும்
எம் நெஞ்சில் உமை தாங்கிடுவோம்
எங்கிருந்தாலும் உமை நினைப்போம்
எல்லைகள் தாண்டி கல்லறை வீரரை நெஞ்சில் சுமப்போம்

நீர் எமக்காக செய்த குருதி அர்ச்சனை நிச்சயம் பலிக்கும்
எதிரி அற்ற நிலம் நமக்கு நிச்சயம் கிட்டும்
நீங்கள் அணிவகுத்துக்காத்த ஈழம்
எந்த தடைகளையும் தாண்டி ஒர் நாள் மலரும்



ஈழவனின் காதல்.!

பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து
விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை
விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை

உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை
நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம்

ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள்
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன,
நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில்
அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது!

முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும்
பிராகச மின்னலை உதிரும் விழிகளும்
தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்!!
உன அழகை என்னவென்று சொல்வேன்!!
அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை
நடமாடும் அகராதி நூல் நீமட்டும் தான் பெண்ணே

உள்ளத்தில் ஒரு வகை காச்சல்
அதனுடன் என்னால் போராடமுடியவில்லை எதிர் நீச்சல்
உன்னை தேடியே விழியின் மேச்சல்
அதை சொல்லத் தயங்குகின்றேன் என் பேச்சில்
உனக்கதை புரியவைக்கத்தான் இந்த அலைச்சல்!

வயது வந்து மேடையிட்டு ஆடுதா கூத்து
இல்லை மாயை என்னை வீழ்த்த வரும் வலையா?
உன் பேச்சில் மயங்கும் மனதை கட்டிவைக்க முயல்கிறேன்
உன்னை கண்டவுடன் கண்மூடி திரும்பினால்
மனத்திரையில் புன்னகைத்து ஏளனம் செய்கிறாய்
பட்டு உடுத்தி கொஞ்சும் தமிழ் பேசி உருகிறாய்
பிஞ்சு மனம் எனதை ஏன் மருகிறாய்?

பூமியில் நான் மனிதனய் பிறந்தது தவறா?
அல்லது அந்த ஆண்டவன் தவறா?
முடிவின்றி தொடர்கின்றது என் ஆராய்சி
ஆனாலும் தவறுகள் வர்க்கத்தில் விரிகின்றது

அதிகார முள்ளில் கரைந்தோடும் நாட்கள் கண்டு
என் இதயம் கொதிக்கின்றது
அதனால் விழியாலே பேசும் வித்தக பதுமையே
உன்னை பொறுமைக்குள் திணிக்கும் காலம் இது

பரந்து விரியும் உன் ஆசையை தூக்கில் இடு!
அடங்க மறுக்கும் உன் உணர்வுகளை சிறையில் இடு!
என்னை தேடும் உன் விழிகளுக்கு சில காலம் ஓய்வு கொடு!

பிறவி கடமைக்கு நான் புறப்படும் காலம் இது
எம் நிலத்தில் எதிரியின் எச்சங்கள் எக்காளம் இட்டு
எம் நிலத்தை சூறையாடி நாசம் செய்து வருகின்றான்
அந்த நரிகளை கண்ட துண்டமாய் கருவாடு ஆக்கி
தாய் நிலத்தை காத்து உன்னை கரம் பிடிக்க வருவே
ன்

அடி அடி துரத்தி அடி..

எடு எடு ஆயுதம் எடு எடு
தொடு தொடு 5 தாம் கட்ட ஈழபோரை தொடு தொடு
முடி முடி ஈழத்தில் எதிரிகள் ஜாவும் முடி முடி
உடை உடை எதிரியின் முற்றுகையை உடைத்து விடு
தடைகள் ஜாவும் தகர்த்து விடு
சிங்கள ராணுவம் யாவும் அழியட்டும்

அடி அடி துரத்தி அடி ஈழத்தில் இருந்து
சிங்கள இராணுவம் சிங்கள தேசம் செல்லும்வரை துரத்தி அடி
செத்து மடிந்து ஓடட்டும் சிங்கள இராணுவம்
தமிழீழம் தமிழன் ஆளட்டும்
சிங்கள இராணுவம் இங்கே எதற்கு
ஈழத்தில் இருந்து துரத்தி அடி அடி
பதுங்கிய புலிகள் பாயட்டும்

எதிரிகள் யாவும் இங்கே புதையட்டும்
பாயும் புலிகள் பாயட்டும்
இங்கே வந்த சிங்கள இராணுவம் யாவும் சிக்கட்டும்
தமிழர்கள் யாவும் நெருப்பாய் மாறி புலியாய் பாயட்டும்
சிங்கள இராணுவம் மாயட்டும்
.
மிண்டும் ஈழக்கதை உலகமெங்கும் தொடங்கட்டும்
தமிழீழம் எங்கும் தமிழர் கையில் வந்து சேரட்டும்
அடி அடி முள்கம்பி வேலியாவும் விலகட்டும் அடி அடி
ஈழத்தில் அடிமை வாழ்க்கை விலகட்டும் முடி முடி
சிந்திய குருதி நீங்கட்டும் .சாவு யாவும் நீங்கட்டும்

பட்ட துன்பம் யாவும் விலகட
வானெங்கும் புலிக்கொடி பறக்கட்டும்
கடல் எங்கும் புலிக்கொடி பாயட்டும்
காடெங்கும் பனை எங்கும் வயலெங்கும்
புல்வெளி எங்கும் தெருவெங்கும் வீடெங்கும்
புலிக்கொடி பறக்கட்டும்
தலைவன் கையில் தமிழீழத்தின்
வெற்றிக்கொடி புயலிட்டு பறக்கட்டும்



வேடிக்கை பார்க்காதே.!!



தமிழா வானமே வயல்களாகும்
மேகமோ நீ சொல்ல பொழியும்
உன் எண்ணத்தின் விதைகளை
அவனியில் விதைத்திடு அதனால்
தமிழரின் ராட்சியம் வளர்ந்திட வழியிடு!!

நாட்களோ வேகமாய் நகருது
இன்று நீ நாடியில் கை வைத்து
வேடிக்கை பார்த்தால் நாட்கள்தான்
ஓடி ஒழிந்திடும்
தமிழனே வீரமாய் நீ எழு நாட்களோடு
உலகும் உன்னை தேடி அலையும்!!

தலைவன் வருவான்டா தமிழா..


ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி
தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா
தமிழ் ஈழம் வென்று தருவான்ரா
தளராதே தமிழா தளராதே

தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா
முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும்
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை
எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே
தளராதே தமிழா தளராதே
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா
அண்ணன் விடப் போவதில்லையடா
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா
அண்ணன் படை விரட்டுமடா
இங்கு தமிழன் ஆளுவானடா
தளராதே தமிழா தளராதே

அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா
காலம் வரும் நல்ல நேரம் வரும்
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும்
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா
தளராதே தமிழா தளராதே

அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும்
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா
சோனியாவின் துண்டு சாணியாக மாறும்
தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு
தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா

ஈழமண்...

ஈழ ஈழ மண் எங்களின் சொந்த மண்
அதை தன் சொந்தமென்று
யார் சொன்னவன்

நம் மண்ணின் உள்ளே வந்து பார்
வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்

எம் முன்னே காசுக்காய் காட்டியே
கொடுத்தாலும் கடத்தித்தான்
நடு காட்டில் விட்டாலும்
எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும்
எம் மண்ணின் விடுதலை காண்போம்

கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும்
குண்டை மழையாக பொழிந்தாலும்
நம்மை பெற்ற அன்னை மண்னை
நாம் மறந்து போகமாட்டோம்

அமைதியாய் பதுங்குது புலி
அது பாய்ந்திடும் போது தெரியும்
உனக்கு அதன் வீரம்

எங்கள் உயிர் உயிர் இல்லையா?


பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம்
அதை செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா?
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ நா வே நீயா?
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா?

காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது
அந்த பிஞ்சின் உயிரையும் கூட குடித்துள்ளது
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா?
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா?
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா?
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

அவலச்சா வேண்டாம் எமக்கு அதுதான் விதி என்றால்
நாட்டைதா எம் உயிரை ஈடுவைத்து
அறியாத பிஞ்சுதான் உனக்கு குறியென்றால்
நீதான் உனக்கு உலகத்தில் பெரும் வீரன்
நச்சு வாயுதான் உன் மகத்தான கணையென்றாலும்
காலடியில் எம் பிணம் வீழும் நிச்சயம் ஆனால் எம் மண் வீழாது

இப் பிஞ்சில் இருந்து கொட்டிய ஒவ்வொரு குருதிச்சொட்டும்
மொட்டாகி மலராகி நாளை உன்னைத்தாக்கும் கணையாகும்
புலத்திலும் எம் நிலத்திலும் இது நிச்சயம் நடக்கும்
காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்
அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து
கொள்

அம்மா கவனம்..


அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும்..
இனி எவரும் இப்படி வாழவேண்டாம் .
இவ்வாறு சாகவேண்டாம்.

உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ
நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை
நினைக்கவே கூடாது!
இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது
நாம் நெருங்க விடவும் கூடாது

அப்பா இல்லை இருக்கிறாரோ தெரியவில்லை
இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக
அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது?
ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது
அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்

அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும்
என் இளையவர் மிகக்கவனம்
இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத
குழந்தைகள் தான் அவர்களுக்கு விருப்பம்
தமிழ் சிசுவின் கொலையும் தான்
வானம் வெறுமையென்று வெளியில் வராதே
நிமிர்ந்தும் நடக்காதே.கண்ட உடன் சுடுவார் கயவர்


மண்தின்று வளரும் மரமாக மாறிவிட்டோம்
இல்லை மாற்றி விட்டார்
நஞ்சற்ற கொடி எல்லாம் உணவு
கசப்பான உணவு கூட அமுது
மலம் கலக்கா நீரெல்லாம் குடிநீர்
மொத்தத்தில் காட்டு மரம் கூட கண்டு
அஞ்சும் காட்டு வாசிகளாக்கிவிட்டார்

அம்மா என் அழுக்கு சட்டை கண்டு கலங்கும்
உன் கண்ணீர் துன்பத்திலும் வற்றாத உன் பாசம்.
சட்டையில் தான் அழுக்கு
இன்னும் என்னில் என் மனத்தில் இல்லை


கயவர்கள் காலடி பட்ட நிலத்திற்கு நீ போகவிரும்பவில்லை
அதில் எனக்கும் விருப்பம் இல்லை
இல்லை என்னும் ஒன்றுக்குள் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்
எதுவும் இங்கில்லை பணம் இல்லை பொருள் இல்லை
மருந்தில்லை உணவில்லை நிம்மதி துளிக்கும் இல்லை

தூங்கவும் விடவில்லை ஒன்று மட்டும் உள்ளது
சுற்றவும் சாவும் அழுகையும் அவலமும்
இது தொடராது தொடர விடவும் மாட்டார் நாம் இதுவரை நம்பியவர்
உலகத்து உறவுகள் எப்போதும் கைவிடார்
அதுவரை உயிரைப்பிடிப்போம் இல்லை
எம் இறப்பில் எழுதப்படட்டும் பிந்திய ஈழத்தின் அத்தியாயம்

தமிழா வீரமாய் நீ எழு ...


தமிழா வானமே வயல்களாகும்
மேகமே நீ சொல்ல பொழியும்
உன் எண்ணத்தின் விதைகளை
அவனியில் விதைத்திடு

அதனால் தமிழரின் ராட்சியம் வளர்ந்திட
வழியிடு நாட்களோ வேகமாய் நகருது...
இன்று நாடியில் நீ கை வைத்து வேடிக்கை பார்த்தால்
நாட்கள்தான் ஓடி ஒளிந்திடும்...
வீரமாய் நீ எழு
நாட்களோடு உலகும்
உன்னை தேடி அலையும்...

கைகோர் தமிழா கைகோர்...!


கைகோர் தமிழா கைகோர்
கைகோர் தமிழா கைகோர்
இந்த பூமியில் வாழ கைகோர்.
தூய தமிழனாய் வாழ கைகோர்

உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.
அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.
நிலம் இன்றி அகதியாய்
சிறுபாண்மை சின்னமாய் நாங்கள்

மூத்தவர் ஆண்டு சென்றுவிட
வந்தவர் நாம் மெளனியாய்
அடிமையாய் தொடர்கின்றோம்
எட்டு கோடியாய் உள்ளோம்
எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்
பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்
சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம்

தொழுது நாம் வாழ்ந்த கோவில்
அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று
சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து
சாகிறான் தமிழன் தினமும்
நிலாச் சோறு உண்ட முற்றம்
அங்கு வீசுகின்றது இரத்தத்தின் நாற்றம்
மெல்ல வருடிய தென்றலில்
நாளும் அவலமாய் செத்தவன் கூக்குரல்
இன்பமாய் விடிந்த காலை
கொலையும் களவுமாய் விடிகின்ற நாட்கள்
செம்மொழி பேசினால் தமிழன் சிறையில்
எண்ணிடும் நாட்கள்

வடக்கிலும் கிழக்கிலும் வாழ் நாள்
முண்டமாய் பைக்குள்
வீதியில் பிஞ்சு குழந்தைகள் முன்னே
இரத்த வெள்ளத்தில் தந்தை
பெற்ற தாய்க்கு முன்னே துப்பாக்கி
குண்டேந்தி தனையன்
தெய்வமாய் போற்றும் பெண்கள் தம்
வாழ்க்கையை தொலைத்த பின் தனியே
கூடவே சுற்றிய நண்பன் கோணிப்பைக்குள் பிணமாய்
புத்தக பையுடன் சென்ற சிறிதொன்று
கிணற்றுக்குள் பிணமாய்
மண முடித்து ஆறாம் நாள் காணாமல்
போன கணவன்

தமிழுக்கு வாலாட்டிய நாய்க்கு
துப்பாக்கி ரவையே பரிசாம்
இன்னும் வெறுமையாய் ஏன் ஒதுங்கி ஓடுகிறாய்
இழப்பையே இருப்பாக்கி மெளனியாய் தொடர்கிறாய்.??
மரம் வெட்ட தடையுண்டு தமிழனை வெட்டபரிசு உண்டாம்.

வன்னியின் வான் பரப்பில் வல்லூறு எச்சங்கள்
அதிகாலையில் ஆனந்த பறவையின்
குரல் கேட்டு கண்விழித்தோம்
ஆனால் இன்று இடியாய் அதிரும் பல்குழல்
ஒலி கேட்டு தேடுகிறோம் பதுங்குகுழியை

கண்சிமிட்டும் நட்சத்திரத்தை
கண்சிமிட்டாமல் பார்த்திருந்தோம்....
ஆனால் இன்று கண்சிமிட்டும் நேரத்தில்
வான் இயந்திரத்தின் வக்கிர தேசமாய் மாறும்
காலாற நாம் நடந்த வயல் காடு கண்ணிவெடி
விளையும் வயலாய் இன்று
நெல்லரிசி சோறுமாய் ஒடியல் பிட்டுமாய்
உரம் ஏற்றிய உடம்பு புழுப்பிடத்த அரிசிக்காய்
நீண்ட வரிசையில் நடு வெயிலில்

குருவிக்கு கூட கூடு உண்டு தமிழா
உன் பிஞ்சுக்கு நாடு உண்டா.?
பாதச்சுவட்டை பதித்திடு ஒரு திசையிட்டு
கைகளை நீட்டி கைகோர்த்து வந்திடு
புள்ளியாய் உள்ள மண்ணை புனிதமாய் காத்து
புதுயுகம் படைக்க புலியாக புறப்படு தமிழா.....

விழ்ச்சி நிலையில்லை...


எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி
புதைத்தாலும் கலங்காதே தமிழா
தோண்டி புதைத்த அடிக்கல்தான்
ஆயிரம் மாடிக்கு படிக்கல்

உதிர்ந்துதான் போனாய் என்று
ஏங்கி நீ விடாதே கண்ணீர்
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான்
பாய்ந்தோடும் ஆறாய் சேரும்

வானத்து நீர் வீழ்ந்துதான்
பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும்
நிலத்தில் வீழ்கின்ற விதையே
பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்

தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து
சோகத்தில் உறங்கிட வேண்டாம்.
உறக்கத்தில் நீ இருந்தாலும்
பறக்க விட்டு விடு உன் புத்தியை

புதுமையை தேடு வாழ்வில்
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர்
பயத்தினால் நடுங்கணும் அவர்கள்

தமிழா இரவும் பகலும் உண்டேல்
அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு
பகைவரின் வெற்றியின் பின்னால்

சில கயவர் நிச்சயம் இருப்பார்
தோல்வியில் அனைவரும்
அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்

இரை தேடி தோற்ற புலி
பசியாலே படுத்து செத்தது உண்டா?
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும்

வெற்றிக்காய் நீ உழைத்தால்
அது உன்னை அரியாசனத்தில்
இட்டு மகுங்கள் சூட்டிடும்

நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு
இரும்பே வளையும் இடியே முனகும்

ஓடும் நீருக்கு தடை இட்டால்
அது கூடி உரையே அழித்திடும்
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால்
பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்

தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு
விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும்
அது வரை காத்திரு


ஈழத்துச்சூரியனே...



ஈழத்துச்சூரியனே வேங்கையாக வந்தவரே!
அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை
எழுப்பிய அயனே

குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை
பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர்
அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை
தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர்
நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர்
வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி
விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை
ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர்
புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர்

கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர்
காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர்
தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை
களமாட விட்டு கண்ட ரசித்தீர்

அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை
கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர்
அகப்பையோடு அலைந்த அவளை ஆட்லறியோடிங்கு
விளையாடச்செய்தீர்
அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை
எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர்
அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும்
வானிலும் தரையிலும் மிடுக்குடன்
நடப்பது உம்மால்

தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம்
எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம்
ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய்
நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம்
என நாம் உயர்ந்தோம்

காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான்
இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில்
தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன்
பலர் உங்களின் படை தொடர்வோம்
காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை
நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன்
பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்

வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற
எழியவர்கள் தலைகுனிந்தார்
அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள்
உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான்
இறுதிவரை உமைத் தொடர்வார்
மலையென எதிரி எம் குகை புகுந்தாலும்
இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும்
உம்முன்னே நாம் நடப்போம்
வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன்
உங்களின் வழி தொடர்ந்திருப்போம்

உனக்கும் எந்தன் நிலைதான்...


ஈழத்தில் சிங்கள இராணுவம் வந்ததே
கொட்டியது குண்டுகளின் மழை ஈழத்தில்
கொடுத்தாளே கொத்துக்குண்டை சோனியா
அதை அடித்தானே சிங்கள ராணுவம்..
ஈழத்தில் கூடிவாழ்ந்த மக்கள் விழுந்தனர் ஐயா..
பறித்தானே தமிழ் மக்கள் உயிரை பறித்தானே
கொத்தாய் பறித்தான் ஐயா சிங்களவன்
கூடிவாழ்ந்த மக்கள் எங்கே.? உறவுகள் எங்கே.?
நாங்கள் வாழ்ந்த கூறை வீடு எங்கே.?
ஓடியாடிய புல்வெளி எங்கே.?
பட்டம் ஏற்றிய அந்த வயல் வெளி எங்கே.?
போட்டானே சிங்களவன் நெருப்புக் குண்டை
வீடும் எரிந்தது ஐயா புல்வெளியும்
பொசுங்கியது ஐயா..
வயல் வெளியும் தீயில் வாடியது ஐயா..
அங்கு ஓடியாடிய சின்னஞ் சிறு
குழந்தைகளும் தீயில் வெந்தது ஐயா..
இலங்கை முழுவதும் தங்கள் நாடு என்று
சொல்லி அடிச்சானே சிங்களவன்..
அளித்தானே தமிழனை ஈழத்தில்
காலை எடுத்து வச்சானே சிங்களவன்
தொலைந்தது ஐயா எங்கள் நிம்மதி...
நாள் தோறும் தொழுத கோவில் எங்கே.?

கோயில் மீது கோடி குண்டுகள் வந்து விழுந்தது ஐயா
இங்கு லட்ச்சகணக்கான தமிழன் செத்தான் ஐயா..
தெய்வம் எங்கே சென்றது ஐயா..
பிறந்தோம் ஈழத்திலே அடிமையாக
வாழ்கின்றோம் இப்போது இங்கே..
நாள் தோறும் பாடம் படித்த பாடசாலை எங்கே.?
நண்பர்கள் எங்கே.? பாடம் சொல்லித்தந்த குருவும் எங்கே.?
பாடசாலை எல்லாம் சிங்கள ராணுவம் ஐயா..
இந்தியா ராணுவம் வந்தது ஐயா..
சிங்கள ராணுவம் வந்தது ஐயா..
கணவன் மனைவியை பிரித்தான் ஐயா..
தாயும் பிள்ளையும் பிரித்தான் ஐயா..
பெண்கள் கர்ப்பை பறித்தான் ஐயா..
கண்ணகி சாபம் மதுரையை எரித்தது ஐயா..
ஈழ பெண்களின் சாபம் இங்குள்ள
ராணுவத்தை அழிக்காத..?

பாதி தமிழன் ஈழத்தில் செத்தான் ஐயா
பாதி தமிழன் அடிமைகள் ஆனான்
தப்பிய தமிழனின் பாதி தமிழன்
காலை இழந்தான் ஐயா..
கையை இழந்தான் ஐயா..
கண்கள் தோண்டப்பட்டது ஐயா..
யுத்தம் முடிஞ்சது என்று சொன்னான் ஐயா..
எங்களை இன்னும் அடிமைகளாக வைத்து
கொடுமை படுத்துறான் ஐயா.

என் காலோ இல்லை என்னை
கொண்டு போய் அடிக்கிறான் ஐயா..
என் வாய் மட்டும் தான் பாடுது
ஐயா பட்ட காயம் இன்னும் ஆறவும் இல்லை
பட்ட துன்பம் இன்னும் தீரவும் இல்லை .
தமிழா நீ புறப்படு போராட இல்லையேல்
உனக்கும் எந்தன் நிலை தான் தமிழா..

தமிழா ...


தமிழன் என்ற அடை மொழியை அகற்ற
நாம் என்ன இறைவனிடம்
வரமா கேட்க முடியும்

அதர்மத்தை அகற்ற
அஸ்திரம்தான் வழியென நாம்
கீதையில் கற்றதுண்டு

நாம் வாழும் நரகத்தில் நமது இடம்
அகதியின் உறைவிடம்
அதை அஸ்தமனம் ஆக்க
ஆண்டவா எம்மை ஆழவிடு என
கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது

கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம்
எம் நிலத்தை களவாடி இட்ட
அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்

மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும்
தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்

விதியே கதியே என எண்ணி
உன் கதியை அவர் கையில் இட்டால்
சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார்
சந்ததி வாழ ஒரு துண்டு
நிலத்தையும் தரமாட்டார்

சங்கத்தால் வழர்த்த மொழி பேச
சங்கடம் வரும் என்று மறக்கிறாய்
சொந்த முகவரி மறைக்க
முகவரி தேடி அலைகிறாய்
போதும் தமிழா போதும்
நீ பட்ட துன்பம்
போதும் தமிழா


ஏய் மகிந்தா ..


ஏய் மானங்கெட்ட மகிந்தா
பொறுத்திரு நம் தலைவன் வருவான்
தரணியிலே தமிழன் தன்மானத்தோடு வாழ
தமிழீழம் வென்று தருவான்...

தோற்றவன் எல்லாம் நிரந்தரமாய்
இருந்ததல்ல தோல்வியில்..
வெற்றிக்கனியை நாம் சுவைக்க
ஈழத்தின் மன்னன் வருவான்டா..
உன் கொட்டம் அடக்குவான்டா..
மனிதாபிமானம் அற்ற அரக்கனே..
வெற்றி கழிப்பில் குதிக்காதே
உன் வெற்றி நிரந்தரமல்ல
நாளை நம் வெற்றி சரித்திரம்
சொல்லுமடா.........
சாதிக்க பிறந்தவன் தமிழன் என்று..
தமிழனே வேகமாய் எழுந்திடு
நம் இனத்தை அழிக்கும்
சீர் இழந்த சிங்களத்துக்கு
பாடம் புகட்டுடா ..
பாரினிலே தன்மானத்துடன்
நம் இனம் வாழ வேண்டும்.
தன் மானம் மிக்கவன் தமிழன்
என்று செயலில் காட்டடா தமிழா.




svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini